கொரியா ஓபன் பேட்மிண்டன்: சிந்து, சமீர் வர்மா கால்இறுதிக்கு தகுதி


கொரியா ஓபன் பேட்மிண்டன்: சிந்து, சமீர் வர்மா கால்இறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 14 Sep 2017 9:09 PM GMT (Updated: 14 Sep 2017 9:09 PM GMT)

கொரியா ஓபன் சூப்பர் சிரீஸ் பேட்மிண்டன் போட்டி தென்கொரியா தலைநகர் சியோலில் நடந்து வருகிறது.

சியோல்,

கொரியா ஓபன் சூப்பர் சிரீஸ் பேட்மிண்டன் போட்டி தென்கொரியா தலைநகர் சியோலில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து 22–20, 21–17 என்ற நேர்செட்டில் தாய்லாந்து வீராங்கனை நிட்சான் ஜின்டாபோலை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். கால்இறுதியில் சிந்து, ஜப்பான் வீராங்கனை மினாட்சு மிதானியை எதிர்கொள்கிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சமீர் வர்மா 21–19, 21–13 என்ற நேர்செட்டில் ஹாங்காங் வீரர் வோங் விங் கி விண்சென்டை சாய்த்து கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் காஷ்யப் 16–21, 21–17, 16–21 என்ற செட் கணக்கில் தென்கொரியா வீரர் சன் வான் ஹோவிடம் தோல்வி கண்டு வெளியேறினார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய்பிரனீத் 13–21, 24–26 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் வாங் சு வெய்யிடம் தோல்வி கண்டு நடையை கட்டினார்.


Next Story