குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா


குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
x
தினத்தந்தி 14 Sep 2017 9:30 PM GMT (Updated: 14 Sep 2017 9:17 PM GMT)

அமெரிக்க நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை 35 வயதான செரீனா வில்லியம்ஸ் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற சாதனையாளர் ஆவார்.

நியூயார்க்,

அமெரிக்க நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை 35 வயதான செரீனா வில்லியம்ஸ் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற சாதனையாளர் ஆவார். அமெரிக்க தொழிலதிபர் அலெக்சிஸ் ஒஹானியனை காதலித்த செரீனா, அவருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பிறகு ஒன்றாக வாழத் தொடங்கினார். இதன் பலனாக கர்ப்பமடைந்த செரீனா வில்லியம்சுக்கு கடந்த 1–ந்தேதி புளோரிடாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அழகான பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் 2 வாரத்திற்கு பிறகு செரீனா வில்லியம்ஸ் தனது குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் முதல்முறையாக வெளியிட்டு இருக்கிறார். குழந்தைக்கு அலெக்சிஸ் ஒலிம்பியா ஒஹானியன் ஜூனியர் என்று பெயர் சூட்டியிருப்பதாக கூறியுள்ள செரீனா, குழந்தை 3.11 கிலோ இருந்ததாக உற்சாகமாக கூறியிருக்கிறார்.

ஆனால் குழந்தை பிறப்பில் அதிக சிரமம் இருந்ததால் 6 நாட்கள் வரை ஆஸ்பத்திரியில் தங்கி இருக்க வேண்டி இருந்ததாகவும் அதில் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், கர்ப்ப காலம் முதல், குழந்தை பெற்றுக்கொண்டது வரையிலான வீடியோ தொகுப்பு ஒன்றையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.


Next Story