புரோ கபடி: குஜராத்திடம் வீழ்ந்தது மும்பை
12 அணிகள் இடையிலான 5–வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ராஞ்சியில் நேற்றிரவு நடந்த 78–வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணி (பி பிரிவு) 46–30 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி 6–வது வெற்றியை
ராஞ்சி,
12 அணிகள் இடையிலான 5–வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ராஞ்சியில் நேற்றிரவு நடந்த 78–வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணி (பி பிரிவு) 46–30 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி 6–வது வெற்றியை பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் (ஏ பிரிவு) குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 39–28 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் மும்பைக்கு அதிர்ச்சி அளித்தது.
இன்றைய ஆட்டங்களில் பெங்களூரு புல்ஸ்–தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 8 மணி), பாட்னா பைரட்ஸ்– உத்தரபிரதேச யோத்தா (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.
Related Tags :
Next Story