கொரியா ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் பி.வி.சிந்து


கொரியா ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் பி.வி.சிந்து
x
தினத்தந்தி 15 Sep 2017 8:44 PM GMT (Updated: 15 Sep 2017 8:44 PM GMT)

கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி சியோல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து

சியோல்,

கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி சியோல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21–19, 16–21, 21–10 என்ற செட் கணக்கில் 63 நிமிடங்கள் போராடி ஜப்பானின் மினட்சு மிதானியை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் சமீர் வர்மா 22–20, 10–21, 13–21 என்ற செட் கணக்கில் ‘நம்பர் ஒன்’ வீரர் கொரியாவின் சன் வான் ஹோவிடம் தோற்று வெளியேறினார்.

இந்த தொடரில் இந்திய தரப்பில் தற்போது ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான பி.வி.சிந்து மட்டுமே களத்தில் நீடிக்கிறார். இன்று நடக்கும் அரைஇறுதியில் சிந்து, ஹி பிங்ஜியாவை (சீனா) எதிர்கொள்கிறார். பிங்ஜியாவுக்கு எதிராக இதுவரை 8 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கும் சிந்து அதில் 3–ல் மட்டுமே வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story