புரோ கபடி: பாட்னா அணி 7–வது வெற்றி


புரோ கபடி: பாட்னா அணி 7–வது வெற்றி
x
தினத்தந்தி 16 Sep 2017 8:52 PM GMT (Updated: 16 Sep 2017 8:51 PM GMT)

12 அணிகள் இடையிலான 5–வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ராஞ்சியில் நேற்றிரவு நடந்த 80–வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்–தெலுங்கு டைட்டன்ஸ் (பி பிரிவு) அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 26–26 என்ற புள்ளி கணக்கில் ‘ட

ராஞ்சி,

12 அணிகள் இடையிலான 5–வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ராஞ்சியில் நேற்றிரவு நடந்த 80–வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்–தெலுங்கு டைட்டன்ஸ் (பி பிரிவு) அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 26–26 என்ற புள்ளி கணக்கில் ‘டை’யில் முடிந்தது. 14–வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணி 4 வெற்றி, 8 தோல்வி, 2 ‘டை’ கண்டுள்ளது. 17–வது ஆட்டத்தில் ஆடிய தெலுங்கு டைட்டன்ஸ் அணி 4 வெற்றி, 11 தோல்வி, 2 டை கண்டு இருக்கிறது. மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணி 45–42 என்ற புள்ளி கணக்கில் உத்தரபிரதேச யோத்தா அணியை வீழ்த்தியது. 13–வது ஆட்டத்தில் ஆடிய பாட்னா அணி பெற்ற 7–வது வெற்றி இதுவாகும்.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்–தபாங் டெல்லி (இரவு 8 மணி), பாட்னா பைரட்ஸ்–பெங்கால் வாரியர்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story