மாநில சப்-ஜூனியர் மகளிர் கபடி: சென்னை மாவட்ட அணி இன்று தேர்வு


மாநில சப்-ஜூனியர் மகளிர் கபடி: சென்னை மாவட்ட அணி இன்று தேர்வு
x
தினத்தந்தி 2 Oct 2017 8:02 PM GMT (Updated: 2 Oct 2017 8:02 PM GMT)

29-வது மாநில சப்-ஜூனியர் மகளிர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி திருவண்ணாமலையில் வருகிற 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடக்கிறது.

சென்னை,

29-வது மாநில சப்-ஜூனியர் மகளிர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி திருவண்ணாமலையில் வருகிற 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான சென்னை மாவட்ட அணியை தேர்வு செய்வதற்கான கபடி போட்டி ராணிமேரி கல்லூரி மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி நடக்கிறது. இந்த போட்டியை தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்க தலைவர் சோலைராஜா, ராணிமேரி கல்லூரி முதல்வர் சாந்தி ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். 16 வயது மற்றும் உடல் எடை 55 கிலோவுக்கு மிகாமல் இருப்பவர்களும் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் வயது சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வர வேண்டும் என்று சென்னை மாவட்ட கபடி சங்க செயலாளர் கோல்டு எம்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Next Story