அகில இந்திய கராத்தே போட்டி சென்னையில் நடக்கிறது


அகில இந்திய கராத்தே போட்டி சென்னையில் நடக்கிறது
x
தினத்தந்தி 3 Oct 2017 10:15 PM GMT (Updated: 3 Oct 2017 9:09 PM GMT)

16–வது கோபுகான் அகில இந்திய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஜெ.ஜெ.உள்விளையாட்டு அரங்கில் வருகிற 7 மற்றும் 8–ந் தேதிகளில் நடக்கிறது.

சென்னை,

‘கட்டா’, ‘குமிதே’ பிரிவில் மொத்தம் 60 பந்தயங்கள் நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து சுமார் 600 வீரர்–வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். 7–ந் தேதி காலை 11.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் இந்திய கராத்தே சங்க தலைவர் கராத்தே ஆர்.தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். பரிசளிப்பு விழாவில் போலீஸ் உதவி கமி‌ஷனர் (கீழ்ப்பாக்கம்) ஜி.ஹரிகுமார் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குகிறார். இந்த தகவலை போட்டி ஒருங்கிணைப்பாளர் எம்.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Next Story