துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 8 Oct 2017 10:15 PM GMT (Updated: 8 Oct 2017 8:53 PM GMT)

அணியில் சிறந்த இளம் வீரர்களும், அனுபவ வீரர்களும் இருக்கிறார்கள். இளம் வீரர்கள் பக்குவமாக செயல்படுகிறார்கள்.

* இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் அளித்த ஒரு பேட்டியில், ‘எங்களது அணி மிகவும் வலுவாக உள்ளது. நீண்ட காலமாக நாங்கள் நன்றாக விளையாடி வருகிறோம்.  தற்போது பெரும்பாலான அணிகள் திறமை மிக்கதாக உள்ளன. முன்பு உலக கிரிக்கெட் அரங்கில் ஆஸ்திரேலிய அணி எப்படி வெற்றிகளை குவித்து ‘வீறுநடை’ போட்டதோ, அதே போன்று நாங்களும் செய்தால் சிறப்பாக இருக்கும்’ என்றார்.

* சீனத்தைபேயில் நடந்த ‘டோர்னமென்ட் பிளையர்ஸ்’ கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் 28 வயதான அஜீதேஷ் சந்து, அமெரிக்காவின் ஜோஹனஸ் வீர்மானை வீழ்த்தி கோப்பையை சொந்தமாக்கினார். இந்த கோப்பையை வென்ற 2-வது இந்தியர் (ஏற்கனவே ககன்ஜீத் புல்லர்) சந்து ஆவார். அவருக்கு ரூ.59 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது.

* துபாயில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் (பகல்-இரவு) 3-வது நாளான நேற்று பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 262 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக அசார் அலி 59 ரன்களும், ஹாரிஸ் சோகைல் 56 ரன்களும் எடுத்தனர். ஹெராத், தில்ருவான் பெரேரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடுத்து 220 ரன்கள் முன்னிலையுடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சை ஆடியது.

* புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு ஜெய்ப்பூரில் அரங்கேறிய 115-வது லீக் ஆட்டத்தில் குஜராத் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 33-29 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்சை சாய்த்து 13-வது வெற்றியை பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் 38-30 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை வென்றது.

* 2018-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஆப்பிரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் நைஜீரியா 1-0 என்ற கோல் கணக்கில் ஜாம்பியாவை வீழ்த்தி, ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து முதல் அணியாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது. வட, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் மண்டலத்துக்கான தகுதி சுற்றில் ஹோண்டுராசுக்கு எதிரான ஆட்டத்தில் 1-1 என்ற கணக்கில் டிரா கண்டதன் மூலம் தனது பிரிவில் இருந்து கோஸ்டாரிகா அணி உலக கோப்பை வாய்ப்பை உறுதி செய்தது.

Next Story