டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி சாய்னா முன்னேற்றம்


டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி சாய்னா முன்னேற்றம்
x
தினத்தந்தி 19 Oct 2017 8:24 PM GMT (Updated: 19 Oct 2017 8:24 PM GMT)

டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஒடென்சி நகரில் நடந்து வருகிறது.

ஒடென்சி,

டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஒடென்சி நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினை (ஸ்பெயின்) எதிர்கொண்டார். 46 நிமிடங்கள் நீடித்த இந்த விறுவிறுப்பான மோதலில் சாய்னா 22-20, 21-18 என்ற நேர்செட்டில் கரோலினா மரினை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். சமீபத்தில் நடந்த ஜப்பான் ஓபன் போட்டியில் 2-வது சுற்றில் கரோலினா மரினிடம் கண்ட தோல்விக்கு சாய்னா பழிதீர்த்துக் கொண்டார். மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து 17-21, 21-23 என்ற நேர்செட்டில் 10-வது இடத்தில் உள்ள சீன வீராங்கனை சென் யுபெயிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்திய வீரர் பிரனாய் 21-17, 11-21, 21-19 என்ற செட் கணக்கில் மலேசியாவின் லீ சோங் வெய்யை போராடி விரட்டியடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார்.

Next Story