துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 24 Oct 2017 8:51 PM GMT (Updated: 24 Oct 2017 8:51 PM GMT)

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் நடுவர் 65 வயதான டேரல் ஹேர். இவர் 1995-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன்

*பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் ‘ஒயிட்’ பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 6-2, 6-2 என்ற நேர் செட்டில் கார்பின் முகுருஜாவை (ஸ்பெயின்) வீழ்த்தி 2-வது வெற்றியுடன் அரைஇறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 7-5, 6-7 (3), 7-5 என்ற செட் கணக்கில் ஆஸ்டாபென்கோவை(லாத்வியா) வீழ்த்தி முதலாவது வெற்றியை பெற்றார்.

* ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் நடுவர் 65 வயதான டேரல் ஹேர். இவர் 1995-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் பந்தை எறிவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். இந்த நிலையில் நடுவர் பணியில் இருந்து ஒதுக்கப்பட்ட பிறகு சிட்னியில் மதுபான கடையில் வேலைபார்த்த அவர் அடுத்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். சூதாட்ட பழக்கத்திற்கு அடிமையான அவர், தான் வேலை பார்த்த இடத்தில் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் மன்னிப்பு கேட்டதுடன், திருடிய ரூ.4½ லட்சத்தை பணத்தை திருப்பி கொடுத்ததால் தண்டனையில் இருந்து தப்பினார்.

* புலவாயோவில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 434 ரன்கள் இலக்கை நோக்கி 4-வது நாளான நேற்று 2-வது இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே அணி 316 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 117 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

Next Story