புரோ கபடியில் 2–வது தகுதி சுற்று: பெங்கால்–பாட்னா அணிகள் இன்று மோதல் சென்னையில் நடக்கிறது


புரோ கபடியில் 2–வது தகுதி சுற்று: பெங்கால்–பாட்னா அணிகள் இன்று மோதல்  சென்னையில் நடக்கிறது
x
தினத்தந்தி 25 Oct 2017 9:35 PM GMT (Updated: 25 Oct 2017 9:35 PM GMT)

5–வது புரோ கபடி லீக் தொடரில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும்

சென்னை,

5–வது புரோ கபடி லீக் தொடரில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டிக்கான 2–வது தகுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணி, பெங்கால் வாரியர்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இதில் வெற்றி காணும் அணி இதே மைதானத்தில் 28–ந்தேதி நடக்கும் மகுடத்திற்கான இறுதி ஆட்டத்தில் குஜராத் அணியுடன் மோதும்.

இந்த சீசனில் பாட்னாவும், பெங்காலும் நேருக்கு மோதிய 3 ஆட்டங்களில் ஒன்றில் பெங்கால் வெற்றி கண்டது. மற்ற இரு ஆட்டங்களும் சமனில் முடிந்தன.

இரவு 8 மணிக்கு தொடங்கும் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story