பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்: சிந்து வெற்றி; சாய்னா தோல்வி


பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்: சிந்து வெற்றி; சாய்னா தோல்வி
x
தினத்தந்தி 26 Oct 2017 8:17 PM GMT (Updated: 26 Oct 2017 8:17 PM GMT)

பிரெஞ்ச் ஓபன் சூப்பர் சீரிஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

பாரீஸ்,

பிரெஞ்ச் ஓபன் சூப்பர் சீரிஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 9-21, 21-23 என்ற நேர் செட்டில் ஜப்பானின் அகானே யமாகுச்சியிடம் பணிந்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து 21-14, 21-13 என்ற நேர் செட்டில் ஜப்பானின் சயாகா தகஹஷியை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.

இதற்கிடையே, புதிதாக வெளியிடப்பட்ட பேட்மிண்டன் தரவரிசையில் சமீபத்தில் டென்மார்க் ஓபன் பட்டத்தை வென்ற இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 4 இடங்கள் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென் முதலிடத்தில் நீடிக்கிறார். பெண்கள் ஒற்றையரில் பி.வி.சிந்து 2-வது இடத்திலும், சாய்னா 11-வது இடத்திலும் உள்ளனர்.

Next Story