தேசிய சப்–ஜூனியர் கபடி : தமிழக அணி அறிவிப்பு


தேசிய சப்–ஜூனியர் கபடி : தமிழக அணி அறிவிப்பு
x
தினத்தந்தி 31 Oct 2017 9:46 PM GMT (Updated: 31 Oct 2017 9:46 PM GMT)

29–வது தேசிய சப்–ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள டும்கா நகரில் வருகிற 4–ந் தேதி முதல் 7–ந் தேதி வரை நடக்கிறது.

சென்னை,

29–வது தேசிய சப்–ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள டும்கா நகரில் வருகிற 4–ந் தேதி முதல் 7–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் தமிழக ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி அணியை தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்க செயலாளர் ஏ.‌ஷபியுல்லா அறிவித்துள்ளார். தமிழக அணிகள் வருமாறு:–

ஆண்கள் அணி: சக்தி மணிகண்டன் (தூத்துக்குடி), லினு (சிவகங்கை), மாரிமுத்து (திருவாரூர்), விஜய் (காஞ்சிபுரம்), அபிமன்யு (நாகை), அஜய் (மதுரை), சிவாஜி (கரூர்), பொன்ராஜ் (விருதுநகர்), தயானந்த் (கோவை), சஞ்சய், மகுடேஸ்வரன் (இருவரும் திருப்பூர்), முத்துக்குமார் (விழுப்புரம்), பயிற்சியாளர்: நாகராஜ், மானேஜர்: ஜெயகாந்தன்.

பெண்கள் அணி: யோகாம்பிகா (விருதுநகர்), சவுமியா (திருவாரூர்), திவ்யா, அனிதா (இருவரும் தர்மபுரி), ஸ்ரீமதி, பவதாரிணி (இருவரும் திண்டுக்கல்), அனிதா (காஞ்சிபுரம்), சங்கரி (வேலூர்), பூமிகா (தஞ்சாவூர்), புஷ்பா (திருவண்ணாமலை), வினோதினி (திருப்பூர்), கவுசல்யா (நாமக்கல்), பயிற்சியாளர்: பாரதிதாசன், மானேஜர்: ரவி.


Next Story