பத்மஸ்ரீ விருதுக்கு ஸ்ரீகாந்த் பெயர் பரிந்துரை


பத்மஸ்ரீ விருதுக்கு ஸ்ரீகாந்த் பெயர் பரிந்துரை
x
தினத்தந்தி 1 Nov 2017 10:30 PM GMT (Updated: 2017-11-02T01:03:09+05:30)

பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் பெயரை பத்மஸ்ரீ விருதுக்கு முன்னாள் மத்திய விளையாட்டு துறை மந்திரி விஜய் கோயல் பரிந்துரை செய்துள்ளார்.

புதுடெல்லி,

ஒரே ஆண்டில் 4 சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சமீபத்தில் பெற்ற இந்திய வீரர் ஸ்ரீகாந்த் பெயரை பத்மஸ்ரீ விருதுக்கு முன்னாள் மத்திய விளையாட்டு துறை மந்திரி விஜய் கோயல், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு பரிந்துரை செய்துள்ளார். விருதுக்கு விண்ணப்பிக்க கடந்த செப்டம்பர் 15–ந் தேதி இறுதி நாள் என்றாலும், முன்னாள் விளையாட்டு மந்திரி காலக்கெடுவுக்கு பிறகும் பரிந்துரை செய்யலாம் என்ற அடிப்படையில் ஸ்ரீகாந்த் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து விஜய் கோயல், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், ‘இந்த தருணத்தில் இந்திய விளையாட்டு துறைக்கு ஸ்ரீகாந்த் அளித்து வரும் பங்களிப்பை அங்கீகரிக்க வேண்டியது அவசியமானதாகும். அவர் இளைஞர்களுக்கு முன்மாதிரியாகவும், கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளிப்பவராகவும் விளங்கி வருகிறார். முன்னாள் விளையாட்டு மந்திரி என்ற முறையில் நான் விருதுக்கு பரிந்துரை செய்யலாம் என்று பலர் என்னை அணுகி தெரிவித்தனர். மக்களின் விருப்பத்தில் அடிப்படையில் அவரது பெயரை விருதுக்கு நான் சிபாரிசு செய்துள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.


Next Story