உலக பெண்கள் இளையோர் குத்துச்சண்டை: 3 இந்திய வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு தகுதி


உலக பெண்கள் இளையோர் குத்துச்சண்டை: 3 இந்திய வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு தகுதி
x
தினத்தந்தி 24 Nov 2017 9:00 PM GMT (Updated: 2017-11-25T01:19:54+05:30)

5–வது உலக பெண்கள் இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வருகிறது.

கவுகாத்தி,

5–வது உலக பெண்கள் இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் 51 கிலோ எடைப்பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதியில் இந்திய வீராங்கனை ஜோதி 4–1 என்ற புள்ளி கணக்கில் ஜான்சயா அப்ராய்மோவாவை (கஜகஸ்தான்) வீழ்த்தி இறுதி சுற்றை எட்டினார். இதன் மூலம் ஜோதிக்கு தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

இதே போல் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஷாஷி சோப்ரா, மங்கோலியாவின் நாமுன் மன்கோரையும், 64 கிலோ பிரிவில் உள்ளூர் மங்கை அன்குஷிதா, தாய்லாந்தின் தான்சோக்கையும் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.


Next Story