இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டி


இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டி
x
தினத்தந்தி 28 Nov 2017 9:45 PM GMT (Updated: 28 Nov 2017 7:03 PM GMT)

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐ.ஓ.ஏ.) புதிய நிர்வாகிகள் தேர்தல் வருகிற 14-ந்தேதி டெல்லியில் நடக்கிறது.

புதுடெல்லி,

ஐ.ஓ.ஏ. தலைவர் பதவிக்கு, சர்வதேச ஆக்கி சம்மேளன தலைவர் நரிந்தர் பாத்ரா மற்றும் தற்போதைய பொருளாளர் அனில் கண்ணா, துணைத்தலைவர் பிரேந்திர பிரசாத் பைய்ஷியா ஆகியோர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.

அதே சமயம் ராஜீவ் மேத்தா, பொதுச்செயலாளராக மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்று பிற்பகல் 2 மணியுடன் நிறைவடைந்து விட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story