12 வயது சிறுமிக்கு முத்தம் நாடுகடத்தலுக்கு காத்திருக்கும் இந்திய பனிசறுக்கு வீரர்


12 வயது சிறுமிக்கு முத்தம் நாடுகடத்தலுக்கு காத்திருக்கும் இந்திய பனிசறுக்கு வீரர்
x
தினத்தந்தி 8 Dec 2017 12:15 PM GMT (Updated: 8 Dec 2017 12:15 PM GMT)

12 வயது சிறுமிக்கு முத்தம் கொடுத்த விவகாரத்தில் இந்திய பனிசறுக்கு வீரர் நாடுகடத்தலுக்கு காத்திருக்கிறார்.


எலிசபெத்டவுன்,

இந்தியாவின் காஷ்மீரை பகுதியை  சேர்ந்த பனிச்சறுக்கு வீரர் தன்வீர் ஹூசைன் ( வயது 25) எசெக்ஸ் கவுண்டி நீதிமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்யபட்ட மனுவால் ஹுசைன் இப்போது நாடுகடத்தலுக்கு காத்திருக்கிறார்.

ஹுசைன்பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ளார்.  12 வயது நிரம்பிய ஒரு  சிறுமிக்கு "உணர்ச்சிமிக்க முத்தம்" கொடுத்ததாக போலீஸ் கூறி உள்ளது.

சனனாக் ஏரியில் உலக ஸ்னோஷோ சாம்பியன் ஷிப்பில் பிப்ரவரி 2016 இல் ஹுசைன் போட்டியிட்டார். போட்டியின் போது அவர் கைது செய்யப்பட்டார்.

Next Story