ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்தியாவுக்கு 5 பதக்கம்
10–வது ஆசிய துப்பாக்கி சுடுதல் (ஏர்கன்) போட்டி ஜப்பானில் நேற்று தொடங்கியது.
புதுடெல்லி,
10–வது ஆசிய துப்பாக்கி சுடுதல் (ஏர்கன்) போட்டி ஜப்பானில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் (225.7 புள்ளிகள்) வெண்கலப்பதக்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீரர் ககன்நரங் 4–வது இடமே பிடித்தார். 10 மீட்டர் ஏர்ரைபிள் ஜூனியர் பிரிவில் இந்திய வீரர் அர்ஜூன் பாபுதா வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கினார். 10 மீட்டர் ஏர் ரைபிள் ஆண்கள், ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் இந்திய அணிகள் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியது.
Related Tags :
Next Story