உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: சிந்து போராடி வெற்றி


உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: சிந்து போராடி வெற்றி
x
தினத்தந்தி 13 Dec 2017 10:25 PM GMT (Updated: 2017-12-14T03:55:23+05:30)

முன்னணி 8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி துபாயில் நேற்று தொடங்கியது.

துபாய்,

முன்னணி 8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி துபாயில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் பிரிவில் ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தனது முதல் ஆட்டத்தில் சீனாவின் ஹி பிங்ஜியாவுடன் மல்லுகட்டினார். 64 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான இந்த மோதலில் சிந்து 21–11, 16–21, 21–18 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார். சிந்து, அடுத்து ஜப்பானின் சயகா சாட்டோவை இன்று எதிர்கொள்கிறார்.

ஆண்கள் ஒற்றையர் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தனது முதல் ஆட்டத்தில் 13–21, 17–21 என்ற நேர் செட்டில் உலக சாம்பியன் விக்டர் ஆக்சல்செனிடம் (டென்மார்க்) வீழ்ந்தார். ஸ்ரீகாந்த் அடுத்து சோவ் டின் சென்னுடன் (சீனதைபே) மோத உள்ளார்.


Next Story