மாநில கைப்பந்து போட்டி: அரைஇறுதியில் கோபி அணி


மாநில கைப்பந்து போட்டி: அரைஇறுதியில் கோபி அணி
x
தினத்தந்தி 14 Dec 2017 10:30 PM GMT (Updated: 14 Dec 2017 10:01 PM GMT)

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில், மாநில கைப்பந்து போட்டி, அரைஇறுதியில் கோபி அணி அறிவிப்பு.

சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் எஸ்.என்.ஜெ.குழுமம் ஆதரவுடன் 67-வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 4-வது நாளான நேற்று நடந்த பெண்கள் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் பி.கே.ஆர்.(கோபி) அணி 25-16, 25-17, 25-11 என்ற நேர்செட்டில் பனிமலர் அணியை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் டாக்டர் சிவந்தி கிளப் அணி, ஜி.கே.எம்.அணியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜி.கே.எம். அணி 25-21 என்ற கணக்கில் முதல் செட்டை தனதாக்கியது. டாக்டர் சிவந்தி கிளப் அணி அடுத்த 2 செட்களை 25-18, 25-17 என்ற கணக்கில் கைப்பற்றியது. 4-வது செட்டில் ஜி.கே.எம். அணி 5-2 என்ற புள்ளி கணக்கில் இருக்கையில் நடுவர் அளித்த தீர்ப்பில் பிரச்சினை ஏற்பட்டதை எடுத்து ஜி.கே.எம். அணி ஆட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது. இதனால் டாக்டர் சிவந்தி கிளப் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அரைஇறுதிக்குள் நுழைந்தது.

Next Story