மாநில கைப்பந்து போட்டி: ஜேப்பியார் அணி ‘சாம்பியன்’


மாநில கைப்பந்து போட்டி: ஜேப்பியார் அணி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 16 Dec 2017 10:45 PM GMT (Updated: 16 Dec 2017 8:16 PM GMT)

மாநில கைப்பந்து போட்டி: ஜேப்பியார் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் எஸ்.என்.ஜெ.குழுமம் ஆதரவுடன் 67-வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 6-வது நாளான நேற்று நடந்த பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் ஜேப்பியார் அணி 27-25, 25-22, 18-25, 23-25, 15-12 என்ற செட் கணக்கில் எஸ்.டி.ஏ.டி. அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பி.கே.ஆர்.(கோபி) 25-19, 25-19 என்ற நேர்செட்டில் டாக்டர் சிவந்தி கிளப் அணியை தோற்கடித்தது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் ரத்னா ஸ்டோர்ஸ் நிர்வாக இயக்குனர் எஸ்.ஆர்.சீனிவாசன், சான் அகாடமி அறங்காவலர் அர்ச்சனா ஆனந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் பதக்கம் வழங்கினார்கள்.

தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன், செயல் துணைத்தலைவர் டாக்டர் பொன் கவுதம் சிகாமணி, சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன்துரை, பொருளாளர் ஏ.பழனியப்பன், போட்டி அமைப்பு குழு நிர்வாகிகள் கேசவன், உபைதுர் ரகுமான், சீனிவாசன், ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story