பிரிமியர் பேட்மிண்டன் லீக்: பி.வி.சிந்து அணி அசத்தல் வெற்றி


பிரிமியர் பேட்மிண்டன் லீக்: பி.வி.சிந்து அணி அசத்தல் வெற்றி
x
தினத்தந்தி 6 Jan 2018 9:00 PM GMT (Updated: 6 Jan 2018 8:19 PM GMT)

8 அணிகள் பங்கேற்றுள்ள 3–வது பிரிமியர் பேட்மிண்டன் லீக் (பி.பி.எல்.) போட்டி தற்போது சென்னை நேரு ஸ்டேடியத்தின் உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.

சென்னை,

8 அணிகள் பங்கேற்றுள்ள 3–வது பிரிமியர் பேட்மிண்டன் லீக் (பி.பி.எல்.) போட்டி தற்போது சென்னை நேரு ஸ்டேடியத்தின் உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் பி.வி.சிந்து தலைமையிலான சென்னை ஸ்மா‌ஷர்ஸ் அணி, ஆமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்சை எதிர்கொண்டது.

பெண்கள் ஒற்றையரில் சென்னை அணியின் நட்சத்திரம் பி.வி.சிந்து 15–11, 10–15, 15–12 என்ற செட் கணக்கில் ஆமதாபாத் வீராங்கனை தாய் ஜூ யிங்கை தோற்கடித்தார். ஆண்கள் ஒற்றையர் ஆட்டம் ஒன்றில் சென்னை வீரர் தனோங்சாக் 15–10, 12–15, 15–14 என்ற செட் கணக்கில் பிரனாயை அடக்கினார். மற்றொரு ஆண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் சென்னை அணி ஏமாற்றத்தை சந்தித்தது.

இதையடுத்து வெற்றிக்கனி யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கலப்பு இரட்டையரில் பி.வி.சிந்து–பி.ஸ்.ரெட்டி இணை 15–14, 15–13 என்ற நேர் செட்டில் கமிலியா– லீ சுன் ஜோடியை வீழ்த்தி பிரமாதப்படுத்தியது.

முடிவில் சென்னை ஸ்மா‌ஷர்ஸ் அணி 2–1 என்ற புள்ளி கணக்கில் ஆமதாபாத் அணியை வீழ்த்தியது. வெற்றி கண்டாலும் சென்னை அணியின் அரைஇறுதி வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து போய் விட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை அணி தனது கடைசி லீக்கில் பெங்களூரு பிளாஸ்டர்சுடன் நாளை மோத உள்ளது.


Next Story