இந்திய ஓபன் குத்துச்சண்டை ஷிவதபா, மேரிகோம் அரைஇறுதிக்கு தகுதி


இந்திய ஓபன் குத்துச்சண்டை ஷிவதபா, மேரிகோம் அரைஇறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 30 Jan 2018 8:30 PM GMT (Updated: 2018-01-31T00:24:27+05:30)

இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.

புதுடெல்லி,

இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவு கால்இறுதி சுற்றில், உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீரர் ஷிவதபா, உஸ்பெகிஸ்தான் வீரர் ஷெர்பெக்கை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவு கால்இறுதி சுற்றில், 5 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மேரிகோம் 5–0 என்ற கணக்கில் சக நாட்டு வீராங்கனை பினா தேவியை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தார். இந்திய வீராங்கனை சரிதாதேவியும் (60 கிலோ) அரைஇறுதிக்கு முன்னேறினார். மற்ற இந்திய வீரர்களான மனோஜ்குமார், மனிஷ் கவுசிக், அமித் பன்கல், ஷியாம்குமார், சதீஷ்குமார், அன்குஷ் தாகியா ஆகியோர் தங்கள் பிரிவில் வெற்றி கண்டு அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தனர்.


Next Story