இந்திய ஓபன் குத்துச்சண்டை மேரிகோம் இறுதிப்போட்டிக்கு தகுதி


இந்திய ஓபன் குத்துச்சண்டை மேரிகோம் இறுதிப்போட்டிக்கு தகுதி
x
தினத்தந்தி 1 Feb 2018 3:13 AM GMT (Updated: 1 Feb 2018 3:13 AM GMT)

இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.

புதுடெல்லி,

இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு அரைஇறுதியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான மேரிகோம், மங்கோலியா வீராங்கனை அட்லான்செட்செஜ்ஜை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்திய வீராங்கனைகள் சரிதா தேவி (60 கிலோ பிரிவு), பிங்கி ஜங்ரா (51 கிலோ), சோனியா (57 கிலோ) ஆகியோரும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர்.

ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவு அரைஇறுதியில், உலக மற்றும் ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர் ஷிவதபா, சக நாட்டு வீரர் மனிஷ் கவுசிக்கிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெண்கலப்பதக்கத்துடன் திருப்திபட வேண்டியதானது. இதேபோல் காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் மனோஜ்குமார் (69 கிலோ) சக நாட்டு வீரர் தினேஷ்சிடம் தோல்வியை சந்தித்தார். இந்திய வீரர்கள் அமித் பன்ஹால். ஷியாம் குமார், சதீஷ்குமார் ஆகியோரும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.


Next Story