துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 18 Feb 2018 8:15 PM GMT (Updated: 18 Feb 2018 7:07 PM GMT)

வங்காளதேசம்- இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சியல்கோட்டில் நேற்று நடந்தது.

* ஏ.எஸ்.வேதநாயகம் நினைவு கோப்பைக்கான மாநில ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டங்களில் ஐ.ஓ.பி.- தெற்கு ரெயில்வே இடையிலான ஆட்டம் 2-2 என்ற கணக்கிலும், ஐ.சி.எப்.- மத்திய கலால் வரி அணிகள் இடையிலான ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கிலும் டிராவில் முடிந்தன. லீக் முடிவில் முதலிடத்தை பிடித்த மத்திய கலால்வரி அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றதுடன், ரூ.30 ஆயிரம் பரிசுத்தொகையையும் பெற்றது. 2-வது இடம் பெற்ற ஐ.சி.எப். அணிக்கு ரூ.20 ஆயிரம் பரிசுத்தொகை கிடைத்தது.

* வங்காளதேசம்- இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சியல்கோட்டில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி குசல் மென்டிஸ் (70), குணதிலகா (42 ரன்) அதிரடியால் 4 விக்கெட்டுக்கு 210 ரன்கள் சேர்த்தது. அடுத்து களம் இறங்கிய வங்காளதேசம் 18.4 ஓவர்களில் 135 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி தொடரை 2-0 என்ற கணக்கில் தனதாக்கியது.

* நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்தது. இதன் அரைஇறுதியில் ஆண்ட்ரீஸ் செப்பியை(இத்தாலி) 6-3, 7-6 (3) என்ற நேர் செட்டில் தோற்கடித்த சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், நேற்று இறுதி ஆட்டத்தில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெடரர் 6-2, 6-2 என்ற நேர் செட்டில் எளிதில் வெற்றி கண்டு கோப்பைபை சொந்தமாக்கினார். இது அவரது 97-வது சர்வதேச பட்டமாகும். இன்று வெளியாகும் புதிய தரவரிசையில் 36 வயதான பெடரர் மீண்டும் முதலிட அரியணையில் ஏறுகிறார்.

Next Story