துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 27 Feb 2018 8:23 PM GMT (Updated: 27 Feb 2018 8:23 PM GMT)

ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 12-ந்தேதி வதோதராவில் நடக்கிறது.

ஆஸ்திரேலிய ஒரு நாள் தொடர்:
இந்திய பெண்கள் அணி அறிவிப்பு


ஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 12-ந்தேதி வதோதராவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய பெண்கள் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டனாக மிதாலிராஜ் தொடருகிறார். காயம் காரணமாக மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி இடம்பெறவில்லை. இந்திய அணி வருமாறு:- மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்பிரீத் கவுர் (துணை கேப்டன்), மந்தனா, பூனம் ரவுத், ஜெமிமா ரோட்ரிக்ஸ், வேதா கிருஷ்ணமூர்த்தி, மோனா மேஷ்ரம், சுஷ்மா வர்மா, எக்தா பிஷ்ட், பூனம் யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட், ஷிகா பாண்டே, சுகன்யா பரிதா, பூஜா வஸ்ட்ராகர், தீப்தி ஷர்மா.

இங்கிலாந்து-நியூசிலாந்து மோதும் 2-வது ஒரு நாள் போட்டி


ங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. ஹாமில்டனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி மவுன்ட் மாங்கானுவில் இன்று நடக்கிறது. லேசான தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சன் இந்த ஆட்டத்தில் ஆடுவது சந்தேகமாகியுள்ளது. ஒரு வேளை அவர் உடல்தகுதி பெறாவிட்டால் அவருக்கு பதிலாக மார்க் சாப்மன் இடம்பெறுவார் என்று பயிற்சியாளர் மைக் ஹெஸ்சன் தெரிவித்தார். வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி பொறுப்பு கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ளது. தொடர்ச்சியாக 9 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ள நியூசிலாந்து அணி, இன்றைய மோதலிலும் வெற்றி பெற்றால் முந்தைய தங்களது சாதனையை சமன் செய்து விடும்.

ஸ்டான்லேக் பந்துவீச்சு: பாண்டிங் வியப்பு ஸ்டான்லேக்


மீபத்தில் நடந்து முடிந்த முத்தரப்பு 20 ஓவர் தொடரில் ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்தை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக பணியாற்றிய முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் அளித்த ஒரு பேட்டியில், ‘ஆஸ்திரேலிய இளம் வேகப்பந்து வீச்சாளர் பில்லி ஸ்டான்லேக் பந்து வீசும் விதத்தை பார்க்கவே அருமையாக இருக்கிறது. கிட்டத்தட்ட 7 அடி உயரத்தில் இருக்கிறார். இதே போல் மணிக்கு ஏறக்குறைய 150 கிலோமீட்டர் வேகத்தில் பவுலிங் செய்வதுடன், புதிய பந்தில் ஸ்விங்கும் செய்கிறார். இன்னும் சிறந்த நிலையை எட்ட அவர் கொஞ்சம் உடல்எடையை அதிகரிக்க வேண்டும். வரலாற்றில், சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக அவர் உருவெடுக்க வாய்ப்புள்ளது’ என்றார். 23 வயதான ஸ்டான்லேக்கை ஐ.பி.எல். ஏலத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி ரூ.50 லட்சத்திற்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர்
பகுதுலே சாய்ராஜ் பகுதுலே


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சாய்ராஜ் பகுதுலே நியமிக்கப்பட்டுள்ளார். மும்பையை சேர்ந்த 45 வயதான பகுதுலே கடந்த 3 ஆண்டுகளாக பெங்கால் அணியின் பயிற்சியாளராக இருந்தார். அவர் கூறுகையில், ‘ஜாம்பவான் ஷேன் வார்னேவை ஆலோசகராக கொண்ட ராஜஸ்தான் அணியில் அங்கம் வகிக்கப்போவதை நினைத்து பரவசமடைகிறேன். வீரர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்’ என்றார்.

Next Story