துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 28 Feb 2018 9:05 PM GMT (Updated: 28 Feb 2018 9:05 PM GMT)

காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் அடுத்த மாதம் (ஏப்ரல்) நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய குத்துச்சண்டை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முதல்முறையாக அணித்தேர்வுக்கான பிரத்யேக பயிற்சி போட்டி எதுவும் வைக்காமல் தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியில் உலக குத்துச்சண்டையில் பதக்கம் வென்றவர்களான கவுரவ் பிதுரி (56 கிலோ), ஷிவ தபா (60 கிலோ) ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. இவர்களது எடைப்பிரிவில் தற்போது சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அணி விவரம் வருமாறு:– ஆண்கள்: அமித் பன்ஹால் (49 கிலோ), முகமது ஹூசாமுத்தீன் (56 கிலோ), மனிஷ் கவுசிக் (60 கிலோ), மனோஜ்குமார் (69 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (75 கிலோ), சதீஷ்குமார் (91 கிலோவுக்கு மேல்), சுமித் சங்வான் அல்லது நமன் தன்வார் (91 கிலோவுக்கு மேல்), கவுரவ் சோலங்கி அல்லது சல்மான் ஷேக் (52 கிலோ), பெண்கள் பிரிவு: மேரிகோம் (48 கிலோ), லவ்லினா போர்கோஹின், எல்.சரிதாதேவி (60 கிலோ).சூதாட்ட புகார்: பாகிஸ்தான் வ

காமன்வெல்த் போட்டி: ஷிவ தபாவுக்கு இடமில்லை

காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் அடுத்த மாதம் (ஏப்ரல்) நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய குத்துச்சண்டை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முதல்முறையாக அணித்தேர்வுக்கான பிரத்யேக பயிற்சி போட்டி எதுவும் வைக்காமல் தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியில் உலக குத்துச்சண்டையில் பதக்கம் வென்றவர்களான கவுரவ் பிதுரி (56 கிலோ), ஷிவ தபா (60 கிலோ) ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. இவர்களது எடைப்பிரிவில் தற்போது சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அணி விவரம் வருமாறு:– ஆண்கள்: அமித் பன்ஹால் (49 கிலோ), முகமது ஹூசாமுத்தீன் (56 கிலோ), மனிஷ் கவுசிக் (60 கிலோ), மனோஜ்குமார் (69 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (75 கிலோ), சதீஷ்குமார் (91 கிலோவுக்கு மேல்), சுமித் சங்வான் அல்லது நமன் தன்வார் (91 கிலோவுக்கு மேல்), கவுரவ் சோலங்கி அல்லது சல்மான் ஷேக் (52 கிலோ), பெண்கள் பிரிவு: மேரிகோம் (48 கிலோ), லவ்லினா போர்கோஹின், எல்.சரிதாதேவி (60 கிலோ).

சூதாட்ட புகார்: பாகிஸ்தான் வீரருக்கு ஓராண்டு தடை

டந்த ஆண்டு நடந்த 2–வது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) கிரிக்கெட் போட்டியில் கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடிய பாகிஸ்தான் வீரர் ஷாஜைப் ஹசன் சூதாட்ட சர்ச்சையில் சிக்கினார். இது குறித்து விசாரணை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு தீர்ப்பாயம், ஷாஜைப் ஹசனுக்கு ஓராண்டு தடை விதித்து நேற்று தீர்ப்பளித்தது. சூதாட்ட தரகர்கள் தன்னை அணுகிய தகவலை கிரிக்கெட் வாரியத்திற்கு தாமதமாக தெரிவித்ததாலேயே அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவரது வழக்கறிஞர் ரிஸ்வி நிருபர்களிடம் தெரிவித்தார். ஏற்கனவே பி.எஸ்.எல். போட்டியின் மூலம் ‘ஸ்பாட்பிக்சிங்’யில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் வீரர்கள் ‌ஷர்ஜூல் கான், கலித் லத்தீப் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டி.ஆர்.எஸ்.?

ர்வதேச கிரிக்கெட் போட்டியில், நடுவர்கள் அளிக்கும் தீர்ப்பில் சந்தேகம் இருந்தால் அதை எதிர்த்து வீரர்கள் அப்பீல் செய்யும் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் தற்போது நடைமுறையில் இருக்கிறது. இதனால் தவறான அவுட்டுகள் தடுக்கப்படுகின்றன. இந்த தொழில்நுட்பத்தை அடுத்த மாதம் தொடங்கும் 11–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் அமல்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையொட்டி நடுவர்களுக்கு டி.ஆர்.எஸ். முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. இது அறிமுகப்படுத்தப்பட்டால், பாகிஸ்தான் சூப்பர் லீக்குக்கு பிறகு இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் 20 ஓவர் லீக் போட்டியாக ஐ.பி.எல். தொடர் இருக்கும்.

இந்திய வீராங்கனை சிந்துவின் கனவு

லக பேட்மிண்டன் தரவரிசையில் 4–வது இடம் வகிக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘8 வயதில் பேட்மிண்டன் விளையாட தொடங்கிய போது, இந்திய அணிக்காக கால்பதிக்க வேண்டும் என்று கனவு கண்டேன். தற்போது இந்திய அணிக்காக ஆடி வரும் நிலையில், என்றாவது ஒரு நாள் உலகின் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையாக வலம் வர வேண்டும் என்று நினைக்கிறேன். ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடிக்க தொடர்ந்து முயற்சிக்கிறேன். அது தான் இப்போது எனது கனவு’ என்றார்.

ஓய்வு எப்போது? யுவராஜ்சிங் பதில்

ந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க போராடி வரும் ஆல்–ரவுண்டர் 36 வயதான யுவராஜ்சிங் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடுவதை எதிர்நோக்கி உள்ளேன். இந்த தொடர் எனக்கு மிகவும் முக்கியமானது. 2019–ம் ஆண்டு வரை என்னென்ன போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்குமோ அவற்றில் தொடர்ந்து விளையாடுவேன். அதன் பிறகே ஓய்வு குறித்து முடிவு எடுப்பேன்’ என்றார்.

‘பும்ராவுக்கு கூடுதல் சுமை கொடுக்கமாட்டோம்’–எம்.எஸ்.கே.பிரசாத்

ந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் நேற்று அளித்த பேட்டியில், ‘தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் செயல்பாடு மகிழ்ச்சி அளித்தது. அவரது திறமை மீது எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. அடுத்து நிறைய சர்வதேச போட்டிகள் வருவதால் அவரை கையாள்வதில் கூடுதல் கவனம் செலுத்துவோம். குறிப்பாக பணிச்சுமை இல்லாமல் பார்த்துக் கொள்வோம். அவரது பந்து வீச்சு முறை அரிதான ஒன்று. அதனால் முக்கியமான டெஸ்ட் தொடர்களில் மட்டும் அவரை பயன்படுத்துவது அவசியமாகும்’ என்றார். ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வரும் 24 வயதான பும்ரா தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆகி மொத்தம் 112.1 ஓவர்கள் பவுலிங் செய்ததுடன் 14 விக்கெட்டுகளும் சாய்த்து இருந்தார்.

மூத்தோர் தடகளம்: சென்னை வீரருக்கு 5 பதக்கம்

39–வது அகில இந்திய மூத்தோர் தடகள போட்டி பெங்களூருவில் நடந்தது. இதில் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் தமிழக வீரர் நம்பிசே‌ஷன் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கமும், 400 மீட்டர் மற்றும் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கமும், 800 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப்பதக்கமும், தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினார். இதன் மூலம் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த நம்பிசே‌ஷன் செப்டம்பர் மாதம் நடக்கும் உலக மூத்தோர் தடகள போட்டிக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


Next Story