உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த ரிஷ்வி தங்கம் வென்றார்


உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த ரிஷ்வி  தங்கம் வென்றார்
x
தினத்தந்தி 4 March 2018 8:02 AM GMT (Updated: 4 March 2018 8:02 AM GMT)

உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த ரிஷ்வி தங்கம் வென்றுள்ளார். மேலும் ஜிது ராய் மற்றும் மெகுலி கோஷ் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றுள்ளனர். #ISSFWorldCup

புதுடெல்லி,

மெக்ஸிகோவின் குவாடலாஜரா பகுதியில் சர்வதேச அளவிலான துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது.

இப்போட்டிகளில் இன்று நடந்த 10மீட்டருக்கான துப்பாக்கி சுடும் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ஷாகர் ரிஷ்வி, ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியனான கிறிஸ்டியன் ரெய்ட்ஷை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 239.7 புள்ளிகள் பெற்றிருந்த கிறிஸ்டியன் ரெய்ட்ஷை விட 2.6 புள்ளிகள் அதிகமாக பெற்று 242.3 புள்ளிகளுடன் வென்று உலக சாதனை படைத்துள்ளார்.

இதே போட்டியில் ஜிது ராய் 219 புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கம் வென்றுள்ளார். மூன்று இந்தியர்கள் பங்கேற்ற இறுதிப்போட்டியில் ஓம் பிரகாஷ் மிதர்வால் 198.4 புள்ளிகளுடன் நான்காம் இடத்தை பகிர்ந்துள்ளார்.

இதே போன்று உலகக்கோப்பை போட்டியில் அறிமுகமாகியிருக்கும் மெகுலி கோஷ் பெண்களுக்கான 10மீ துப்பாக்கிச்சுடும் போட்டியில் 228.4 புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இந்த இறுதி போட்டியிலும் மூன்று இந்திய வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில், அஞ்ஜூம் மெளடிகில் 208.6 புள்ளிகளுடன் நான்காம் இடத்தையும், அபுர்வி சண்டெலா 144.1 புள்ளிகளுடன் ஏழாம் இடத்தையும் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

உலகக்கோப்பையில் ஒரு தங்கம் மற்றும் இரண்டு வெண்கல பதக்கத்தை வென்றுள்ள இந்தியாவுக்கு இப்போட்டியானது வெற்றிகரமான ஒரு துவக்கமாக அமைந்துள்ளது.

Next Story