துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 4 March 2018 9:00 PM GMT (Updated: 4 March 2018 8:36 PM GMT)

இங்கிலாந்து தடகள ஜாம்பவான் ரோஜர் பானிஸ்டர் நேற்று காலமானார். அவருக்கு வயது 88.

*இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி தேசிய தேர்வு குழு தலைவர் பதவியை சில தினங்களுக்கு முன்பு ராஜினாமா செய்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், ஐ.பி.எல். அணியில் இணைந்துள்ளார். கிங்ஸ் லெவன் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

*கிளப் போட்டியில் ஆடிய போது வலது கால்பாதத்தில் எலும்பு முறிவுக்குள்ளான பிரேசிலின் நட்சத்திர கால்பந்து வீரர் 26 வயதான நெய்மாருக்கு நேற்று முன்தினம் வெற்றிகரமாக ஆபரே‌ஷன் நடந்தது. அடுத்த 6 வார காலத்திற்கு அவருக்கு முழுமையாக ஓய்வு தேவை. அதன் பிறகே அவர் எப்போது களம் திரும்ப முடியும் என்பது தெரிய வரும்.

*துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ், அமெரிக்காவின் ஜாமி செரெட்டானி ஜோடி 2–6, 6–7(2) என்ற நேர் செட்டில் ஜூலியன் ரோஜர் (பிரான்ஸ்)– ஹோரியா டெகாவ் (ருமேனியா) இணையிடம் தோற்றது. 2–வது இடத்தை பிடித்ததன் மூலம் 300 தரவரிசை புள்ளிகளை பெற்ற 44 வயதான லியாண்டர் பெயஸ் இரட்டையர் தரவரிசையில் மீண்டும் டாப்–50 இடத்திற்குள் நுழைய வாய்ப்புள்ளது. தற்போது அவர் 52–வது இடம் வகிக்கிறார்.

*இங்கிலாந்து தடகள ஜாம்பவான் ரோஜர் பானிஸ்டர் நேற்று காலமானார். அவருக்கு வயது 88. ஓட்டப்பந்தயத்தில் ஒரு மைல் தூரத்தை 4 நிமிடத்திற்குள் கடந்த முதல் வீரர் இவர் தான். 1954–ம் ஆண்டு மே மாதம் நடந்த போட்டியில் அவர் 3 நிமிடம் 59.4 வினாடிகளில் இலக்கை கடந்தது நினைவு கூரத்தக்கது.


Next Story