அஸ்லான் ஷா ஆக்கி: இந்திய அணி முதல் வெற்றி


அஸ்லான் ஷா ஆக்கி: இந்திய அணி முதல் வெற்றி
x
தினத்தந்தி 7 March 2018 10:30 PM GMT (Updated: 7 March 2018 8:38 PM GMT)

அஸ்லான் ஷா ஆக்கி தொடரில் இந்திய அணி மலேசியாவை பந்தாடியது.

இபோக்,

6 அணிகள் பங்கேற்றுள்ள 27-வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவின் இபோக் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி தனது 4-வது லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான மலேசியாவை நேற்று எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் பந்தாடியது. லக்ரா(10-வது நிமிடம்), குர்ஜந்த் சிங் (42 மற்றும் 57-வது நிமிடம்), சுமித் குமார் (48-வது நிமிடம்), ரமன்தீப்சிங் (51-வது நிமிடம்) ஆகியோர் இந்திய அணியில் கோல் போட்டனர். மலேசிய அணியில் பைசல் சாரி (33-வது நிமிடம்) ஆறுதல் கோல் திருப்பினார்.

முதல் 3 ஆட்டங்களில் ஒன்றில் டிராவும், 2-ல் தோல்வியும் கண்டிருந்த இந்திய அணிக்கு நடப்பு தொடரில் இது தான் முதல் வெற்றியாகும். இதுவரை 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ள இந்திய அணி தனது கடைசி லீக்கில் அயர்லாந்தை நாளை எதிர்கொள்கிறது.

மற்றொரு ஆட்டத்தில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியா 4-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி 4-வது வெற்றியை சுவைத்தது. அர்ஜென்டினா- இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

Next Story