பெடரேஷன் கோப்பை கைப்பந்து போட்டி இன்று தொடக்கம்


பெடரேஷன் கோப்பை கைப்பந்து போட்டி இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 10 March 2018 9:27 PM GMT (Updated: 10 March 2018 9:27 PM GMT)

பெடரேஷன் கோப்பை கைப்பந்து போட்டி இன்று தொடங்குகிறது.

சென்னை,

பெடரேஷன் கோப்பைக்கான 31-வது தேசிய கைப்பந்து போட்டி ஆந்திர மாநில வாராங்கல் மாவட்டத்தில் உள்ள பிமாவரத்தில் இன்று முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது. கடந்த மாதம் கோழிக்கோட்டில் நடந்த தேசிய சீனியர் கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் கால் இறுதிக்கு தகுதி பெற்ற கேரளா, இந்தியன் ரெயில்வே, சர்வீசஸ், கர்நாடகா, தமிழ்நாடு, பஞ்சாப், ஆந்திரா, அரியானா மற்றும் அகில இந்திய பல்கலைக்கழக அணியும், பெண்கள் பிரிவில் இந்தியன் ரெயில்வே, கேரளா, மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா அணியும் கலந்து கொள்கின்றன. இந்த போட்டிக்கான அகில இந்திய பல்கலைக்கழக கைப்பந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தை சேர்ந்த 6 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். அணி வருமாறு:-

ஹரிகரன், ஆத்திஸ்வரன், மனோஜ், சத்ரியன் (கேப்டன்), குரு பிரசாந்த், ராமநாதன் (6 பேரும் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம்), ஜிபின் செபாஸ்டியன், சஜித் (இருவரும் கோழிக்கோடு பல்கலைக்கழகம்), முஜீப், அபிலாஷ் (இருவரும் பாரதியார் பல்கலைக்கழகம்), அஸ்வின் ராஜ் (அண்ணா பல்கலைக்கழகம்), நிகில் சவுத்ரி (குருகேஸ்த்ரா பல்கலைக்கழகம்), தலைமை பயிற்சியாளர்: தட்சிணாமூர்த்தி, உதவி பயிற்சியாளர்கள்: மோகனகிருஷ்ணன், சிவா, செப்-டி-மிஷன்: வைத்தியநாதன்.

பெடரேஷன் கோப்பை கைப்பந்து போட்டி இன்று தொடங்குகிறது.



Next Story