துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 14 March 2018 9:15 PM GMT (Updated: 14 March 2018 9:14 PM GMT)

இலங்கை முத்தரப்பு தொடருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

* களத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக தென்ஆப்பிரிக்க பவுலர் ரபடாவுக்கு 2 டெஸ்டில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் அப்பீல் செய்து இருக்கிறார். அப்பீல் குறித்து விசாரணை நடத்துவதற்கு அடுத்த 48 மணி நேரத்திற்குள் விசாரணை கமிஷனரை ஐ.சி.சி. நியமிக்கும். அவர் 7 நாட்களுக்குள் விசாரணை நடத்துவார்.

* ரஞ்சி சாம்பியன் விதர்பா-ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி (5 நாள் ஆட்டம்) நாக்பூரில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி தொடக்க நாளில் 2 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் சேர்த்துள்ளது. கேப்டன் பைஸ் பசால் 89 ரன்களும், வாசிம் ஜாபர் 113 ரன்களும் (நாட்-அவுட்) எடுத்தனர்.

* இலங்கை முத்தரப்பு தொடருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. மும்பையில் நடந்த விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விராட் கோலி கூறுகையில், ‘தொடர்ச்சியாக விளையாடியதன் மூலம் ஏற்பட்ட லேசான காயங்கள், தற்போது கிடைத்த ஓய்வின் மூலம் சரியாகி விட்டன. பணிச்சுமைக்கு உடல் கொஞ்சம் ஒத்துழைக்க மறுக்கிறது. உடல்ஒத்துழைப்பு, எனது மனம், எனது கிரிக்கெட் இவை எல்லாம் எப்படி முன்னோக்கி செல்ல வேண்டும் என்பது பற்றிய விஷயத்தில் நான் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டி உள்ளது. இந்த ஓய்வை முற்றிலும் உற்சாகமாக அனுபவித்து வருகிறேன். கிரிக்கெட்டை தவற விடுவதாக துளி கூட நினைக்கவில்லை. ஏனெனில் இந்த ஓய்வு எனக்கு அவசியமான ஒன்றாகும்’ என்றார்.

Next Story