சென்னை ஓபன் ஸ்னூக்கர் போட்டி இன்று தொடக்கம்


சென்னை ஓபன் ஸ்னூக்கர் போட்டி இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 15 March 2018 9:00 PM GMT (Updated: 15 March 2018 8:41 PM GMT)

ஒய்.எம்.சி.ஏ.சார்பில் சென்னை ஓபன் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டி வேப்பேரியில் இன்று முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது.

சென்னை,

ஒய்.எம்.சி.ஏ.சார்பில் சென்னை ஓபன் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டி வேப்பேரியில் இன்று முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ரபாத் ஹபிப், திலிப்குமார், ஸ்ரீகிருஷ்ணா, கிரிஷ், வருண்குமார், பாண்டுரங்கையா, அரவிந்த் குமார், வெங்கடேஷ், அனுபமா, நீனா பிரவீன், மனாஸ்வினி உள்பட 100-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு ரூ.50 ஆயிரமும், 2-வது இடம் பெறுபவருக்கு ரூ.30 ஆயிரமும், அரைஇறுதியில் தோல்வி காணுபவர்களுக்கு ரூ.15 ஆயிரமும், கால்இறுதிக்கு முன்னேறுபவர்களுக்கு ரூ.10 ஆயிரமும் ரொக்கப்பரிசாக வழங்கப்படும். இதுதவிர சிறப்பு பரிசும் அளிக்கப்படுகிறது. இந்த தகவலை சென்னை ஒய்.எம்.சி.ஏ.சேர்மன் ரவிக்குமார் டேவிட், தலைமை நடுவர் ஆர்.பி.கணேஷ் ஆகியோர் தெரிவித்தனர்.

Next Story