ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரருக்கு 2 வெண்கலப்பதக்கம்


ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரருக்கு 2 வெண்கலப்பதக்கம்
x
தினத்தந்தி 23 March 2018 9:45 PM GMT (Updated: 23 March 2018 8:40 PM GMT)

ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் 2 வெண்கலப்பதக்கம் வென்றார்.

சிட்னி,

ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ‘டிராப்’ தனிநபர் பிரிவில் 16 வயதான இந்திய வீரர் விவான் கபூர் இறுதிப்போட்டியில் 30 புள்ளிகள் குவித்து வெண்கலப்பதக்கம் வென்றார். இத்தாலி வீரர் மாட்லோ மாரோன்ஜி (39 புள்ளிகள்) தங்கப்பதக்கமும், சீன வீரர் யிலி ஒயாங் (39 புள்ளிகள்) வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினார்கள். இதன் அணிகள் பிரிவில் விவான் கபூர், லக்‌ஷய் ஷெரோன், அலி அமன் எலாஹி ஆகியோர் அடங்கிய இந்திய அணி (328 புள்ளிகள்) வெண்கலப்பக்கம் பெற்றது. சீன அணி (335 புள்ளிகள்) தங்கப்பதக்கமும், ஆஸ்திரேலிய அணி (331 புள்ளிகள்) வெள்ளிப்பதக்கமும் வென்றன.

Next Story