துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 29 April 2018 8:00 PM GMT (Updated: 29 April 2018 7:40 PM GMT)

அடுத்த ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ள இந்திய வீரர்-வீராங்கனைகள் அடையாளம் கண்டு மத்திய அரசு சிறப்பு பயிற்சி அளிக்க உதவி செய்து வருகிறது.

சேலஞ்சர் டென்னிஸ்: பிராஜ்னேஷ் ஞானேஸ்வரன் ‘சாம்பியன்’

ர்வதேச சேலஞ்சர் டென்னிஸ் போட்டி சீனாவில் அன்னிங் நகரில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பிராஜ்னேஷ் ஞானேஸ்வரன், எகிப்து வீரர் முகமது சாப்வாத்தை சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பிராஜ்னேஷ் ஞானேஸ்வரன் 5-7, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் முகமது சாப்வாத்தை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த ஆட்டம் 1 மணி 52 நிமிடம் நீடித்தது. சேலஞ்சர் போட்டியில் பிராஜ்னேஷ் ஞானேஸ்வரன் ஒற்றையர் பட்டத்தை வெல்வது இதுவே முதல்முறையாகும்.

ஒலிம்பிக் திட்டத்தில் அங்கிதா ரெய்னா

டுத்த ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ள இந்திய வீரர்-வீராங்கனைகள் அடையாளம் கண்டு மத்திய அரசு சிறப்பு பயிற்சி அளிக்க உதவி செய்து வருகிறது. ஒலிம்பிக் பதக்க சிறப்பு பயிற்சிக்கான திட்டத்தில் இந்திய டென்னிஸ் வீராங்கனை அங்கிதா ரெய்னா சேர்க்கப்பட்டுள்ளார். உலக ஒற்றையர் தரவரிசையில் 197-வது இடத்துக்கு முன்னேறியுள்ள அங்கிதா ரெய்னா, சானியா மிர்சா, நிருபமா வைத்யநாதனுக்கு பிறகு உலக தரவரிசையில் 200 இடங்களுக்குள் முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 3 தங்கம்

56-வது பெல்கிரேடு சர்வதேச குத்துச்சண்டை போட்டி செர்பியாவில் நடந்தது. இதில் ஆண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு ஷர்மா 5-0 என்ற கணக்கில் அல்ஜீரியா வீரர் முகமது துயாரெக்கை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். 91 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சுமித் சங்வான் 5-0 என்ற கணக்கில் ஈகுவடார் வீரர் காஸ்டிலோ டோரெஸ் வீழ்த்தி தங்கப்பதக்கம் கைப்பற்றினார். பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை நிக்ஹாத் ஷர்மா 5-0 என்ற கணக்கில் கிரீஸ் வீராங்கனை கோட்ஜியார்ஜோபோலுவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். இந்த போட்டியில் இந்தியா மொத்தம் 3 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலப்பதக்கம் வென்றது.

நெய்மார் உடல் தகுதியில் முன்னேற்றம்

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடக்கிறது. இந்த நிலையில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் காலில் ஏற்பட்ட காயத்துக்கு மார்ச் மாதத்தில் ஆபரேஷன் செய்து இருந்தார். தற்போது நெய்மார் காயத்தில் இருந்து வேகமாக மீண்டு வருவதாகவும், உலக கோப்பை போட்டிக்கான பயிற்சியில் அவர் அணியினருடன் விரைவில் கலந்து கொள்வார் என்று பிரேசில் அணியின் டாக்டர் ரோட்ரிகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Next Story