ஜப்பானில் ஆசிய கராத்தே போட்டி: இந்திய அணியில் 34 வீரர்–வீராங்கனைகள் கராத்தே தியாகராஜன் தலைமையில் பங்கேற்பு


ஜப்பானில் ஆசிய கராத்தே போட்டி: இந்திய அணியில் 34 வீரர்–வீராங்கனைகள் கராத்தே தியாகராஜன் தலைமையில் பங்கேற்பு
x
தினத்தந்தி 8 May 2018 9:00 PM GMT (Updated: 8 May 2018 8:41 PM GMT)

17–வது ஆசிய கேடட், ஜூனியர் மற்றும் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானில் உள்ள ஒக்கினாவாவில் வருகிற 10–ந் தேதி முதல் 13–ந் தேதி வரை நடக்கிறது.

சென்னை,

17–வது ஆசிய கேடட், ஜூனியர் மற்றும் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானில் உள்ள ஒக்கினாவாவில் வருகிற 10–ந் தேதி முதல் 13–ந் தேதி வரை நடக்கிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 500 வீரர்–வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இந்த போட்டியில் 34 வீரர்–வீராங்கனைகள் அடங்கிய இந்திய கராத்தே அணி பங்கேற்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியினர், இந்திய கராத்தே சங்க தலைவர் கராத்தே ஆர்.தியாகராஜன், பொதுச்செயலாளர் பரத் ‌ஷர்மா தலைமையில் ஒக்கினாவா சென்றுள்ளனர். இந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள 10 வீரர்–வீராங்கனைகள் மற்றும் 2 பயிற்சியாளர்களுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் நிதி உதவி அளித்துள்ளது.

இந்திய கராத்தே அணியில் தமிழகத்தை சேர்ந்த ஸ்டீவன் சிவக்குமார், அபிநயா, பிரியங்கா, ராஜேஸ்வரி ஆகிய வீரர்–வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். ரவி சிவக்குமார் பயிற்சியாளராகவும், லானி சிவக்குமார், ஸ்ரீனிவாசன் தங்கவேலு ஆகியோர் டெக்னிக்கல் அதிகாரியாகவும், சோனிகா விக்ரமன், சந்தான கிருஷ்ணன் நந்தகுமார், துரைவேலு பலராமன் ஆகியோர் நடுவர்களாகவும் இந்திய அணியினருடன் சென்றுள்ளனர்.


Next Story