துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 5 Jun 2018 9:00 PM GMT (Updated: 5 Jun 2018 8:27 PM GMT)

*வங்காளதேச கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த இலங்கையைச் சேர்ந்த ஹதுருசிங்கா கடந்த அக்டோபர் மாதம் பதவியை ராஜினாமா செய்தார்.

*டேராடூனில் நேற்றிரவு நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2–வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தமிம் இக்பால் 43 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் 135 ரன்கள் இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி ஆடியது.

*வங்காளதேச கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த இலங்கையைச் சேர்ந்த ஹதுருசிங்கா கடந்த அக்டோபர் மாதம் பதவியை ராஜினாமா செய்தார். இதன் பிறகு புதிய பயிற்சியாளர் தேடுதல் வேட்டையை தொடங்கிய வங்காளதேச கிரிக்கெட் வாரியம் ஒரு வழியாக அந்த பணியை நிறைவு செய்துள்ளது. வங்காளதேச அணியின் புதிய பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் விக்கெட் கீப்பர் ஸ்டீவ் ரோட்ஸ் நியமிக்கப்பட இருக்கிறார். பயிற்சியாளரை தேர்வு செய்யும் ஆலோசகராக செயல்பட்ட கேரி கிர்ஸ்டன், பயிற்சியாளர் பதவிக்கு ஸ்டீவ் ரோட்ஸ் பெயரை பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

*இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் கிளைன் மெக்ராத் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய கேப்டன் விராட் கோலி இப்போது அனுபவம் மிக்க வீரர். அவர் தரமான பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இங்கிலாந்து சீதோஷ்ண நிலையில் ரன்கள் குவிப்பது கடினமானது. அதுவும் அங்குள்ள சூழலுக்கு நன்கு பழக்கப்பட்ட ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற பவுலர்களை சமாளிக்க கோலி மிக கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். கோலி சாதிக்க வேண்டும் என்றால் அங்குள்ள சூழலுக்கு ஏற்ப தன்னை சீக்கிரமாக மாற்றிக் கொள்ள வேண்டும். கோலி–ஆண்டர்சன் மோதலை பார்க்க ஆர்வமுடன் உள்ளேன்’ என்றார்.

*தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித்துக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடை விதித்தது. இருப்பினும் லீக் வடிவிலான போட்டிகளில் விளையாட அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ஸ்டீவன் சுமித் அளித்த ஒரு பேட்டியில், ‘உண்மையை சொல்ல வேண்டும் என்றால் பந்தை சேதப்படுத்திய பிரச்சினைக்கு பிறகு தொடர்ந்து 4 நாட்கள் நான் அழுது கொண்டே இருந்தேன். மனரீதியாக துவண்டு போனேன். அதிர்ஷ்டவசமாக நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் எனக்கு ஆதரவாக இருந்து தேற்றினர்’ என்றார்.


Next Story