துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 6 Jun 2018 8:30 PM GMT (Updated: 6 Jun 2018 7:41 PM GMT)

வெஸ்ட் இண்டீஸ் – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப்–ஸ்பெயினில் நேற்று தொடங்கியது.

* வெஸ்ட் இண்டீஸ் – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப்–ஸ்பெயினில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி உணவு இடைவேளையின் போது 25 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்திருந்தது.

*இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர்சிங், தனது 3–வது தொழில்முறை குத்துச்சண்டை பட்டத்துக்காக இங்கிலாந்தின் லீ மார்காமை, சூப்பர் மிடில்வெயிட் பிரிவில் எதிர்கொள்கிறார். இந்த பந்தயம் அடுத்த மாதம் (ஜூலை) 13–ந்தேதி லண்டனில் நடக்கிறது.

*கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் சீனதைபே, கென்யா ஆகிய அணிகளை வீழ்த்திய இந்திய அணி இன்று கடைசி லீக்கில் நியூசிலாந்துடன் (இரவு 8 மணி) மோத இருக்கிறது.


Next Story