வருவாயில் மூன்றில் ஒரு பங்கை வீரர்கள் அரசுக்கு செலுத்த வேண்டும் அரியானா அரசின் அறிவிப்பால் சர்ச்சை; எதிர்ப்பால் பணிந்தது


வருவாயில் மூன்றில் ஒரு பங்கை வீரர்கள் அரசுக்கு செலுத்த வேண்டும் அரியானா அரசின் அறிவிப்பால் சர்ச்சை; எதிர்ப்பால் பணிந்தது
x
தினத்தந்தி 8 Jun 2018 8:45 PM GMT (Updated: 8 Jun 2018 8:43 PM GMT)

அரியானா மாநிலத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் விளையாட்டுத்துறையில் அதிக அளவில் சாதிக்கிறார்கள்.

சண்டிகார்,

அரியானா மாநிலத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் விளையாட்டுத்துறையில் அதிக அளவில் சாதிக்கிறார்கள். அந்த மாநில அரசும் அவர்களுக்கு நிறையை ஊக்கத்தொகை வழங்குகிறது. சமீபத்தில் காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா கைப்பற்றிய 66 பதக்கங்களில் 22 பதக்கங்களை இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் வென்றவை ஆகும். தங்கம் வென்றவர்களுக்கு ரூ.1½ கோடியும், வெள்ளி வென்றவர்களுக்கு ரூ.75 லட்சமும், வெள்ளிப்பதக்கம் பெற்றவர்களுக்கு ரூ.50 லட்சமும் வழங்கப்படும் என்று அரியானா மாநில அரசு அறிவித்தது.

இந்த நிலையில் அரியானாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் விளம்பர ஒப்பந்தம் வாயிலாகவோ அல்லது அரசு பணியின் மூலமாகவோ தாங்கள் சம்பாதிக்கும் தொகையில் இருந்து மூன்றில் ஒரு பங்கை அரியானா மாநில விளையாட்டு கவுன்சிலுக்கு செலுத்த வேண்டும் என்று அரசு அதிரடியான ஒரு உத்தரவை பிறப்பித்தது. இந்த தொகை மாநில விளையாட்டு மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.

அரியானா அரசின் அறிவிப்புக்கு வீரர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ‘ஏற்கனவே சம்பாதிக்கும் தொகைக்கு வரி கட்டுகிறோம். அரசு எப்படி இது போன்ற அறிவிப்பை வெளியிடுகிறது? தேசத்திற்காக பதக்கம் வெல்ல விளையாட்டு வீரர்கள் என்னென்ன தியாகங்கள் செய்கிறார்கள் என்பது அரசுக்கு புரியவில்லையா?’ என்று மல்யுத்த வீராங்கனை பபிதா கேள்வி எழுப்பினார். இதே போல் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில்குமாரும் அதிருப்தி தெரிவித்தார்.

எதிர்ப்பு எதிரொலியாக சர்ச்சைக்குரிய அறிவிப்பை அரியானா அரசு நேற்றிரவு திரும்ப பெற்றுக் கொண்டது.


Next Story