துளிகள்
ரியல்மாட்ரிட்டின் புதிய பயிற்சியாளராக ஸ்பெயின் முன்னாள் வீரர் ஜூலென் லோப்டெகுய் நேற்று நியமிக்கப்பட்டார்.
* ஸ்பெயினின் புகழ்பெற்ற கால்பந்து கிளப்பான ரியல்மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக இருந்த ஜிடேன் அந்த பதவியில் இருந்து சமீபத்தில் விலகினார். இந்த நிலையில் ரியல்மாட்ரிட்டின் புதிய பயிற்சியாளராக ஸ்பெயின் முன்னாள் வீரர் ஜூலென் லோப்டெகுய் நேற்று நியமிக்கப்பட்டார். இவர் தற்போது ஸ்பெயின் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார். உலக கோப்பை போட்டி முடிந்ததும் கிளப்புடன் இணைவார்.
* இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி அளித்த பேட்டியில், ‘இந்த உலக கோப்பையில் சிறந்த 4 அணிகள் எது என்று என்னிடம் கேட்டால் ஜெர்மனி, ஸ்பெயின், பிரேசில், பிரான்ஸ் ஆகிய அணிகளைத்தான் சொல்வேன். இங்கிலாந்து, பெல்ஜியம் அணிகளும் சவாலான அணிகளாக உள்ளன’ என்றார்.
* களிமண் தரை போட்டிகளை தவிர்த்த 2-ம் நிலை டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) ஜெர்மனியில் தொடங்கியுள்ள ஸ்டர்கர்ட் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கிறார். இதில் நேரடியாக 2-வது சுற்றில் ஆடும் பெடரர் இறுதி சுற்றை எட்டினால் மீண்டும் முதலிடத்தை பிடிப்பார்.
* உலக கோப்பை கால்பந்து போட்டியையொட்டி நடந்த கடைசி கட்ட பயிற்சி ஆட்டங்களில் பெல்ஜியம் 4-1 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகாவையும், ஜப்பான் 4-2 என்ற கோல் கணக்கில் பராகுவேயையும் நொறுக்கியது.
* இங்கிலாந்து கால்பந்து அணியின் கேப்டன் ஹாரி கேன் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்த உலக கோப்பை போட்டி தொடரில் வெற்றிக்காக ஆக்ரோஷமாகவும், தைரியத்துடனும் போராட வேண்டும் என்பது தான் எங்களது பிரதான நோக்கமாகும். முதல் லீக் ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களது உடனடி இலக்காகும். அடுத்து 2-வது லீக் ஆட்டம் குறித்து கவனம் செலுத்துவோம். ஒவ்வொரு ஆட்டத்தையும் இலக்காக கொண்டு செயல்படுவது தான் எங்களது எண்ணமாகும்’ என்றார். ‘ஜி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இங்கிலாந்துடன் பெல்ஜியம், பனாமா, துனிசியா ஆகிய அணிகளும் அங்கம் வகிக்கின்றன.

Related Tags :
Next Story