6 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கபடி போட்டி: துபாயில் நடக்கிறது


6 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கபடி போட்டி: துபாயில் நடக்கிறது
x
தினத்தந்தி 14 Jun 2018 10:15 PM GMT (Updated: 14 Jun 2018 7:53 PM GMT)

6 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கபடி போட்டிகள் துபாயில் நடைபெற உள்ளன.

துபாய்,

சர்வதேச கபடி பெடரேஷன் சார்பில், துபாய் விளையாட்டு கவுன்சில் ஆதரவுடன் 6 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கபடி போட்டி வருகிற 22-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை துபாயில் உள்ள அல் வாஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், கென்யா ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஈரான், தென்கொரியா, அர்ஜென்டினா ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிப்போட்டிக்கு முன்னேறும். தினசரி இரண்டு லீக் ஆட்டங்கள் முறையே இரவு 8 மற்றும் 9 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டங்கள் வருகிற 22 மற்றும் 25-ந் தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Next Story