பிற விளையாட்டு

உலக கோப்பை போட்டியில் ஆடிய ஈரான் வீரர் சர்தார் திடீர் ஓய்வு + "||" + World Cup match Iran warrior Sardar Sudden rest

உலக கோப்பை போட்டியில் ஆடிய ஈரான் வீரர் சர்தார் திடீர் ஓய்வு

உலக கோப்பை போட்டியில் ஆடிய ஈரான் வீரர் சர்தார் திடீர் ஓய்வு
உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆடிய ஈரான் அணியின் முன்கள வீரரான 23 வயது சர்தார் அஸ்மோன் சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று திடீரென அறிவித்தார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்,

உலக கோப்பை தகுதி சுற்று ஆட்டங்களில் 11 கோல்கள் அடித்து அசத்திய சர்தார் அஸ்மோன், இந்த உலக கோப்பையில் எந்த கோலும் அடிக்கவில்லை.

சர்தார் அஸ்மோன் தனது டுவிட்டர் பதிவில், ‘தேசிய அணிக்காக விளையாடியது மிகப்பெரிய கவுரவமாகும். இது எனது வாழ்நாள் முழுவதும் பெருமை அளிக்கக்கூடியதாகும். துரதிர்ஷ்டவசமாக எனது தேசிய அணியில் இருந்து விடைபெறும் முடிவை எடுக்க வேண்டியதாகி விட்டது. 23 வயதிலேயே எனது வாழ்க்கையில் முக்கியமான, மிகவும் வேதனைக்குரிய முடிவை எடுத்து இருக்கிறேன். எனது தாயார் உடல் நலக்குறைவில் இருந்து மீண்டு வந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் சில இரக்கமற்ற நபர்களின் செயல்களாலும், அவமரியாதையினாலும் வேறுவழியின்றி இந்த ஓய்வு முடிவை எடுக்க வேண்டியதானது’ என்று தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...