தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் - சரத் கமல் அதிர்ச்சி தோல்வி


தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் - சரத் கமல் அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 9 July 2018 9:45 PM GMT (Updated: 9 July 2018 8:11 PM GMT)

தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டியில் சரத் கமல் அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.

பஞ்ச்குலா,

தேசிய ரேங்கிங் (வடக்கு மண்டலம்) டேபிள் டென்னிஸ் போட்டி அரியானாவில் நடந்து வருகிறது. இதில் 2-வது சுற்றில் நேரடியாக விளையாட தகுதி பெற்ற தமிழகத்தை சேர்ந்த முன்னணி வீரரான சரத் கமல், தெலுங்கானாவை சேர்ந்த ஜூனியர் வீரரான சினேகித்தை சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சரத் கமல் 10-12, 11-9, 3-11, 9-11, 11-5, 14-12, 8-11 என்ற செட் கணக்கில் சினேகித்திடம் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

Next Story