பிற விளையாட்டு

உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் இன்று தொடக்கம் + "||" + World Junior Squash Competition Start in Chennai today

உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் இன்று தொடக்கம்

உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் இன்று தொடக்கம்
இந்திய ஸ்குவாஷ் பெடரே‌ஷன் மற்றும் தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கம் சார்பில், உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.

சென்னை, 

இந்திய ஸ்குவாஷ் பெடரே‌ஷன் மற்றும் தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கம் சார்பில், உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டி நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமி மற்றும் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் இன்று (புதன்கிழமை) முதல் 29–ந் தேதி வரை நடக்கிறது. முதல் 6 நாட்கள் தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டியும், இதனை தொடர்ந்து அணிகள் சாம்பியன்ஷிப் போட்டியும் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா, எகிப்து, ஆஸ்திரேலியா, மலேசியா, சவுதிஅரேபியா, சிங்கப்பூர், ஸ்காட்லாந்து உள்பட 28 நாடுகளை சேர்ந்த 170 வீரர்–வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியை நடத்த தமிழக அரசு ரூ.50 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது. இதற்கான செக்கை தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்க தலைவர் என்.ராமச்சந்திரனிடம் வழங்கினார்.