உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி இந்திய வீரர்கள் வெற்றி


உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி இந்திய வீரர்கள் வெற்றி
x
தினத்தந்தி 18 July 2018 9:30 PM GMT (Updated: 18 July 2018 8:29 PM GMT)

இந்திய ஸ்குவாஷ் பெடரே‌ஷன் மற்றும் தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கம் சார்பில், உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னை நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நேற்று தொடங்கியது.

சென்னை, 

இந்திய ஸ்குவாஷ் பெடரே‌ஷன் மற்றும் தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கம் சார்பில், உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னை நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நேற்று தொடங்கியது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ராகுல் பாய்தா 11–5, 12–10, 11–8 என்ற செட் கணக்கில் சுவிட்சர்லாந்து வீரர் நில்ஸ் ரோச்சை தோற்கடித்து 3–வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் யாஷ் பத்டே 10–12, 11–7, 11–7, 11–6 என்ற செட் கணக்கில் ஜெர்மனி வீரர் அப்டெல் ரஹ்மாவை தோற்கடித்து 3–வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்ற ஆட்டங்களில் இந்திய வீரர்கள் அட்வைத் அடிக், உட்கர்ஷ் ஆகியோர் தோல்வி கண்டு வெளியேறினார்கள்.


Next Story