உலக ஜூனியர் ஸ்குவாஷ்: இந்திய வீரர்கள் தோல்வி


உலக ஜூனியர் ஸ்குவாஷ்: இந்திய வீரர்கள் தோல்வி
x
தினத்தந்தி 19 July 2018 10:00 PM GMT (Updated: 19 July 2018 8:22 PM GMT)

13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னை நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நடந்து வருகிறது.

சென்னை, 

13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னை நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ராகுல் பாய்தா 4-11, 9-11, 9-11 என்ற நேர் செட் கணக்கில் மோன்டாசரிடம் (எகிப்து) வீழ்ந்தார். யாசிர் பாத்டே, வீர் சோட்ரானி ஆகிய இந்திய வீரர்களும் தோல்வியை தழுவினர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து வீராங்கனை அலிஸ் கிரீன் 11-13, 11-4, 11-8, 11-8, 11-9 என்ற செட் கணக்கில் செங் நகா சிங்கை (ஹாங்காங்) தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் போட்டித் தரநிலையில் முதலிடம் வகிக்கும் ரோவன் எலராபி (எகிப்து) 11-4, 11-8, 11-2 என்ற நேர் செட்டில் இந்திய வீராங்கனை ஆஷிதாவை பந்தாடினார். இதே போல் ஐஸ்வர்யா, சன்யா வட்ஸ் ஆகியோரும் 2–வது சுற்றை தாண்டவில்லை. இத்துடன் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.


Next Story