தோள்பட்டை காயத்துக்கு ஆபரே‌ஷன் செய்கிறார், சஹா


தோள்பட்டை காயத்துக்கு ஆபரே‌ஷன் செய்கிறார், சஹா
x
தினத்தந்தி 19 July 2018 10:00 PM GMT (Updated: 19 July 2018 8:26 PM GMT)

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது இடதுகை பெருவிரலில் காயமடைந்தார்.

பெங்களூரு, 

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது இடதுகை பெருவிரலில் காயமடைந்தார். இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடவில்லை.

காயத்தில் இருந்து மீண்டு, உடல்தகுதியை எட்டுவதற்கான பயிற்சிகளை பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மேற்கொண்டார். அங்கு உடல்தகுதி நிபுணர், பயிற்சி முறைகளில் செய்த குளறுபடியால் தோள்பட்டை காயத்தில் சிக்க வேண்டியதாகி விட்டது. சஹாவுக்கு அடிக்கடி தோள்பட்டை பிரச்சினை சிறிய அளவில் ஏற்படும். ஆனால் இப்போது காயத்தன்மை அதிகமாகி விட்டது. இதன் எதிரொலியாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு அவர் தேர்வாகவில்லை.

33 வயதான விருத்திமான் சஹா, தோள்பட்டை காயத்துக்கு ஆபரே‌ஷன் செய்வதற்காக அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு செல்ல முடிவு செய்துள்ளார். அவ்வாறு ஆபரே‌ஷன் செய்யும் பட்சத்தில் குறைந்தது 2 மாதங்கள் பேட்டை தொட முடியாது. அதன் பிறகு தான் படிப்படியாக உடற்பயிற்சியை தொடங்க முடியும். எனவே இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அவர் ஆடுவதும் சந்தேகம் தான்.


Next Story