உலக ஜூனியர் ஸ்குவாஷ்: அரைஇறுதியில் எகிப்து வீரர்கள்
13–வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னை நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நடந்து வருகிறது.
சென்னை,
13–வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னை நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டங்களில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய எகிப்து வீரர், வீராங்கனைகள் எல்லா ஆட்டங்களிலும் வாகை சூடினர். பெண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் எகிப்தின் ரோவன் எலராபி 12–10, 11–6, 11–3 என்ற நேர் செட் கணக்கில் சக நாட்டவர் ஹனா மோட்டாசை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். இதே போல் லுசி டர்மல், ஜன ஷிகா, ஹனியா எல் ஹம்மாமி ஆகிய வீராங்கனைகளும் தங்களது ஆட்டத்தில் வெற்றி பெற்றனர். ஆண்கள் பிரிவில் மார்வன் டாரெக், ஓமர் எல் டோர்கி, மோஸ்தபா எல் செர்டி, மோஸ்தபா அசல் ஆகிய எகிப்து வீரர்களும் அரைஇறுதியை உறுதி செய்தனர்.
Related Tags :
Next Story