பிற விளையாட்டு

ஜெர்மனி பார்முலா1 கார்பந்தயம்: ஹாமில்டன் முதலிடம் + "||" + Germany Formula 1 Car Racing: Hamilton topped

ஜெர்மனி பார்முலா1 கார்பந்தயம்: ஹாமில்டன் முதலிடம்

ஜெர்மனி பார்முலா1 கார்பந்தயம்: ஹாமில்டன் முதலிடம்
இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 11–வது சுற்றான ஜெர்மனி கிராண்ட்பிரி அங்குள்ள ஹாக்கென்ஹீம் ஓடுதளத்தில் நேற்று நடந்தது.

ஹாக்கென்ஹீம், 

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 11–வது சுற்றான ஜெர்மனி கிராண்ட்பிரி அங்குள்ள ஹாக்கென்ஹீம் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 306.458 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். இதில் 14–வது வரிசையில் இருந்து புறப்பட்ட நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 32 நிமிடம் 29.845 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்ததுடன், அதற்குரிய 25 புள்ளிகளை தட்டிச்சென்றார். இந்த சீசனில் அவரது 4–வது வெற்றி இதுவாகும். அவரை விட 4.5 வினாடி பின்தங்கிய பின்லாந்தின் வால்டெரி போட்டாஸ் 2–வது இடம் பெற்றார். முதல்வரிசையில் இருந்து புறப்பட்ட உள்ளூர் வீரர் செபாஸ்டியன் வெட்டலின் கார் துரதிர்ஷ்டவசமாக 55–வது சுற்றின் போது விபத்துக்குள்ளாகி பாதியில் வெளியேற நேரிட்டது. போர்ஸ் இந்தியா அணிக்காக பங்கேற்றுள்ள செர்ஜியோ பெரேஸ் (மெக்சிகோ), ஈஸ்ட்பான் ஒகான் (பிரான்ஸ்) முறையே 7, 8–வது இடங்களை பிடித்தனர்.

11 சுற்று முடிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் ஹாமில்டன் 188 புள்ளிகளுடன் முதலிடத்திலும், செபாஸ்டியன் வெட்டல் 171 புள்ளிகளுடன் 2–வது இடத்திலும் உள்ளனர். 12–வது சுற்று போட்டி வருகிற 29–ந்தேதி ஹங்கேரியில் நடக்கிறது.