உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இன்று தொடக்கம்


உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 30 July 2018 5:14 AM GMT (Updated: 30 July 2018 5:14 AM GMT)

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று தொடங்க உள்ளன. #WorldBadmintonChampionship

நான்ஜிங்(சீனா),

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவின் நான்ஜிங் நகரில் இன்று தொடங்குகின்றன. இந்தப் போட்டிகள் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

இதில் இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பி.வி.சிந்து, வெண்கலம் வென்ற சாய்னா நெவால், ஆடவர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் உலகக் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

மற்றொரு முன்னணி வீரரான பிரணாய் துவக்க சுற்றில் ஆஸ்திரேலியாவின் அபினவ் மனோட்டாவை எதிர்கொள்கிறார். மேலும் சாய் பிரணீத், சமீர் வர்மா ஆகியோர் ஒற்றையர் பிரிவில் களம் காண்கின்றனர். இரட்டையர் பிரிவில் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி, மகளிர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஆகியோர் இந்தியா சார்பில் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் இரட்டையர் பிரிவில் மனு அட்ரி-சுமீத் ரெட்டி, ரோஹன் கபூர்-குஹூ கார்க், செளரப் சர்மா-அனுஷ்கா பாரிக் கலப்பு இரட்டையர் பிரிவில் களம் காண்கின்றனர். ஆடவர் இரட்டையர் பிரிவில் அர்ஜுன்-ராமச்சந்திரன், தருண் கோனா-செளரவ் சர்மா ஆகியோரும், மகளிர் பிரிவில் குஹூ கார்க்-நிங்ஷி ஹஸாரிகா, மேகனா-பூர்விஷா, சன்யோகிதா-பிரஜக்தா ஆகியோரும் பங்கேற்கின்றனர்


Next Story